முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ புயல் டெல்டா பகுதிகளில் அதிக அழிவை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் அழிந்தன. தொடர்ந்து டெல்டா பகுதிகளில் கனமழையால் நிவாராணப் பணிகள் முடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்கச் செல்வதாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வானிலை மாற்றம் காரணமாக திருச்சி வரை சென்றுவிட்டு, நிவாராணப் பணிகளை மேற்கொள்ளாமல் சென்னை திரும்பினார். முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ நிவாரண நிதியாக ரூபாய் 13,000 கோடி கேட்க முடிவு தானே புயல் பாதிப்பினைவிட இந்த கஜா அதிகமான பாதிப்பை புயல் உருவாக்கியுள்ளது. கஜாவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு மாறுவதற்கு நிச்சயம் ஒரு மாதத்திற்கும் மேலாகும். கஜா புயல் நிவாரண நிதியாக 13,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசினை வலியுறுத்த நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப...