தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தைக் கடந்து சென்றபோது அவரது காரை மறிக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சித்தனர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. ஆளுநர் வாகனம் பின்னால் அதிகாரிகள் வந்த காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.