Skip to main content

Posts

Showing posts from November, 2018

திருவாரூரில் ஆளுநரின் காரை மறிக்க முயன்ற திருவாரூர் பொதுமக்கள்.

 தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தைக் கடந்து சென்றபோது அவரது காரை மறிக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சித்தனர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. ஆளுநர் வாகனம் பின்னால் அதிகாரிகள் வந்த காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

       திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நேற்று(21/11/2018) முதல் இன்றுவரை(22/11/2018) இடைவெளிவிட்டு மழை பெய்துவருகிறது. அதனால் இரவு நேரங்களில் விட்டுவிட்டு மின் தடை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் 11செ.மீ மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. நாளை(23/11/2018) திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மழை நாளை நிற்குமா என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.                           அனைவருக்கும் இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்.

கஜா புயல் நிவாரண நிதி 13,000 கோடி பிரதமரை கேட்க டெல்லியில் சந்தித்தார் முதல்வர்.

           முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ புயல் டெல்டா பகுதிகளில் அதிக அழிவை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் அழிந்தன‌. தொடர்ந்து டெல்டா பகுதிகளில் கனமழையால்  நிவாராணப் பணிகள் முடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்கச் செல்வதாக இருந்த‌ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வானிலை மாற்றம் காரணமாக திருச்சி வரை சென்றுவிட்டு, நிவாராணப் பணிகளை மேற்கொள்ளாமல் சென்னை திரும்பினார். முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ நிவாரண நிதியாக ரூபாய் 13,000 கோடி கேட்க முடிவு தானே புயல்  பாதிப்பினைவிட‌ இந்த கஜா அதிகமான பாதிப்பை புயல் உருவாக்கியுள்ளது. கஜாவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு மாறுவதற்கு நிச்சயம் ஒரு மாதத்திற்கும் மேலாகும். கஜா புயல் நிவாரண நிதியாக 13,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசினை வலியுறுத்த நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று பேசினர். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு இ